என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் கிரிக்கெட் - மும்பை இந்தியன்சை வெளியேற்றியது டெல்லி டேர்டெவில்ஸ்
  X

  ஐபிஎல் கிரிக்கெட் - மும்பை இந்தியன்சை வெளியேற்றியது டெல்லி டேர்டெவில்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்சை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvMI
  ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

  அந்த அணியின் பிரித்வி ஷா, மேக்ஸ்வெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 12 ரன்னிலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

  ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா முறையே 43 ரன்களும், 15 ரன்களும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 174 ரன்கள் எடுத்தது.

  மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா, பும்ரா, மயங்க் மார்க்கண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

  இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் களமிறங்கினர்.  எவின் லெவிஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி 31 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பென் கட்டிங் 20 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் போராடி 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

  இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை எடுத்து 11 ரன்களில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

  டெல்லி அணி சார்பில் லாமிச்சென், ஹர்ஷர் படேல், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #DDvMI
  Next Story
  ×