search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் அணி நீடிக்குமா? ஐதராபாத்துடன் இன்று மோதல்
    X

    பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் அணி நீடிக்குமா? ஐதராபாத்துடன் இன்று மோதல்

    ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.#IPL2018 #RCBvSRH #RCB #SRH
    பெங்களூர்:

    ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 5 அணிகள் உள்ளன. டெல்லி அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

    51-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்க இயலும். தோல்வி அடைந்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    பெங்களூர் அணி வாய்ப்பில் நீடிக்குமா? வெளியேறுமா? என்று இன்றைய ஆட்டத்தில் தெரிய வரும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிபடுத்துவார்கள். பஞ்சாப்புக்கு எதிராக அந்த அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

    ஐதராபாத் அணியிடம் ஏற்கனவே 5 ரன்னில் தோற்று இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் நம்பிக்கையுடன் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், உமேஷ் யாதவ், யசுவேந்திர சாஹல் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத் அணி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி பெங்களூரை வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆட்டத்தில் முற்றுப் புள்ளி வைத்தது. இதனால் மீண்டும் வெற்றி வேட்கையில் அந்த அணி உள்ளது.

    ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ரஷ்த்தாரி, புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.#IPL2018 #RCBvSRH #RCB #SRH
    Next Story
    ×