என் மலர்

  செய்திகள்

  தேசிய அணி தேர்வு குறித்து விமர்சனம் செய்தேனா?- வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார் ரிஷப் பந்த்
  X

  தேசிய அணி தேர்வு குறித்து விமர்சனம் செய்தேனா?- வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார் ரிஷப் பந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய தேசிய அணிக்கு என்னை தேர்வு செய்யவில்லை என்று நான் செய்தி வெளியிட்டதாக கூறப்பட்ட வதந்திக்கு ரிஷப் பந்த் விளக்கம் அளித்துள்ளார். #rishabhPant
  இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் என்று கருதப்பட்டவர் ரிஷப் பந்த். இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 12 போட்டியில் ஒரு சதம், நான்கு அரைசதங்களுடன் 582 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 31 சிக்சர்களும் விளாசியுள்ளார்.

  சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ரிஷப் பந்த் திற்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம் கிடைக்காததால், ரிஷப் பந்த் தேர்வுக்குழு பற்றி விமர்சனம் செய்ததாக செய்திகள் வெளியானது.  இப்படி செய்திகள் வெளியானதால் அதிர்ச்சியடைந்த ரிஷப் பந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘‘நான் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து விமர்சனம் செய்ததாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து நான் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.

  இந்திய அணி தேர்வு பற்றி நான் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதை விளக்கமாக அளிக்கிறேன். ஆகவே, வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். அத்துடன் என்னுடைய ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த விடுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×