search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் ரெய்னா படைத்த சாதனைகள்
    X

    ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் ரெய்னா படைத்த சாதனைகள்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்க கிங்ஸ் அதிரடி வீரர் ரெய்னா சாதனைகள் படைத்துள்ளார். #IPL2018 #Raina
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர்க கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. இதற்கு முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னாதான். அவர் 35 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்தார்.

    இதன்மூலம் இந்த சீசனில் 10 ஆட்டங்களில் 3 அரைசதத்துடன் 313 ரன்கள் குவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா ஐபிஎல் டி20 லீக் தொடங்கிய காலத்தில் இருந்தே விளையாடி வருகிறார். 11-வது சீசனில் விளையாடிடும் ரெய்னா, ஒவ்வொரு சீசனிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளார். எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.



    அத்துடன் ஜடேஜா பந்தில் ரகானே ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்சை பிடித்ததன் மூலம் ஒரே பந்து வீச்சாளருக்காக அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் பந்து வீசும்போது 16 முறை கேட்ச் பிடித்து பொல்லார்டு முதல் இடத்தில் உள்ளார். ரெய்னா பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்து வீச்சில் தலா 12 கேட்ச் பிடித்துள்ளார். சாஹல் பந்து வீச்சில் ஏபி டி வில்லியர்ஸ் 11 கேட்ச் பிடித்து 3-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×