என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2018- 14 விக்கெட் உடன் பர்பிள் தொப்பியை கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா
    X

    ஐபிஎல் 2018- 14 விக்கெட் உடன் பர்பிள் தொப்பியை கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா

    கொல்கத்தாவிற்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார். #IPL2018 #MIvKKR #hardikPandya
    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய பாதி சீசன் முடிவடைந்த நிலையில் பரபரப்பான நிலையில் லீக் ஆட்டங்கள் சென்று கொண்டிருக்கிறன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறவில்லை. அந்த அணி ஒரு போட்டியில் தோற்றாலும் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில்தான் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகிய முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹர்திக் பாண்டியா, கொல்கத்தா அணியை 168 ரன்னில் கட்டுப்படுத்தி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.



    20 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த சீசனி்ல் பேட்டிங்கை விட பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் 9 ஆட்டங்களில் 27.4 ஓவர்கள் வீசி 235 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் இதுவரை அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரருடன், அதற்கான பர்பிள் தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். 
    Next Story
    ×