என் மலர்

  செய்திகள்

  சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ கதிகலக்கிய ரிஷப் பந்த், விஜய் சங்கர்
  X

  சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ கதிகலக்கிய ரிஷப் பந்த், விஜய் சங்கர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிஷப் பந்த், விஜய் சங்கர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 88 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கதிகலங்க வைத்தனர். #IPL2018 #CSKvDD
  டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 211 ரன் குவித்ததால் எளிதில் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் கருதினர். அதற்கு ஏற்றவாரே டெல்லி டேர்டெவில்ஸ் முதல் 8.5 ஓவர்களில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.

  4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி பந்து வீச்சாளர்களை திணறடித்தார். அவருக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் உதவியாக இருந்தார். ரிஷப் பந்த் 45 பந்தில் 79 ரன் எடுத்து (7 பவுண்டரி, 4 சிக்சர்) 17.4 வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

  அவரது அவுட்டுக்கு பிறகு விஜய் சங்கர் அதிரடியில் ஈடுபட்டார். பிராவோ வீசிய 19-வது ஓவரில் அவர் 3 சிக்சர்கள் அடித்தார். அந்த ஓவரில் 21 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 28 ரன் தேவைப்பட்டது. நிகிடி வீசிய அந்த ஓவரில் 2-வது பந்தில் விஜய் சங்கர் சிக்சர் அடித்தார். கடைசி 3 பந்தில் 17 ரன் தேவையாக இருந்தது. 3 பந்திலும் சிக்சர் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்து விடுவாரா? என்ற அச்சம் ஏற்பட்டது.  ஆனால் நிகிடி நேர்த்தியாக பந்து வீசி எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்த விஜய் சங்கர் 31 பந்தில் 54 ரன் (1 பந்தில் 5 சிக்சர்) எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ரன்னில் வெற்றி பெற்றாலும் ரிஷப் பந்த், விஜய் சங்கரும் அந்த அணியை கதிகலங்க வைத்துவிட்டனர்.
  Next Story
  ×