search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். போட்டி- கொல்கத்தா அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி
    X

    ஐ.பி.எல். போட்டி- கொல்கத்தா அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

    ஐ.பி.எல். தொடரில், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. #DDvKKR #IPL2018
    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணியின் ப்ரித்வி ஷா, கொலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் டெல்லி அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

    மன்ரோ 18 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஷிவம் மாவி பந்தில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் ப்ரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 44 பந்தில் 62 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 93 ரன்களுடன் களத்தில் இருந்தார்.



    கொல்கத்தா அணி 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர். மேக்ஸ்வெல் வீசிய இரண்டாவது ஓவரிலேயே அதிரடி வீரர் கிறிஸ் லின் 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய உத்தப்பா 1 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார்.

    அடுத்ததாக வந்த நிதிஷ் ரானா, நரேனுடன் ஜோடி சேர முயன்ற நிலையில் டிரெண்ட் போல்ட், நரேனை 26 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆக கொல்த்தா அணி 9.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.



    இதையடுத்து களமிறங்கிய சுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மாறி,மாறி சிக்ஸ், பவுண்டரி என அடித்து அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். கொல்கத்தா அணி 141 ரன்கள் எடுத்த போது கில் 37 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த சிவம் மாவி டக் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரஸல் 44 ரன்களில் அவேஸ் கான் பந்தில் போல்ட் ஆனார்.  பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக கொல்கத்தா அணி  20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதனால், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான முதல் போட்டியிலேயே டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி உள்ளது.

    டெல்லி அணி தரப்பில் போல்ட், மேக்ஸ்வெல், அவேஸ் கான், மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆட்ட நாயகனாக டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டார். #DDvKKR #IPL2018
    Next Story
    ×