என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் 2018 - முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்திய அன்கித் ராஜ்பூட்டுக்கு சேவாக் பாராட்டு
  X

  ஐபிஎல் 2018 - முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்திய அன்கித் ராஜ்பூட்டுக்கு சேவாக் பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய அன்கித் ராஜ்பூட்டுக்கு, விரேந்தர் சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார். #VIVOIPL #SRHvKXIP #VirenderSehwag #AnkitRajpoot

  ஐதராபாத்:

  ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. 

  இதையடுத்து, பஞ்சாப் அணி 133 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. ஆனால், ஐதராபாத் அணியினர் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங்கால் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தியது. இறுதியில் பஞ்சாப் அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஐதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

  இப்போட்டியில், பஞ்சாப் அணி வீரர் அன்கித் ராஜ்பூட் சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட் வீழ்த்தினார். இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளர் ஐந்து விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

  இந்நிலையில், சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட் வீழ்த்திய அன்கித் ராஜ்பூட்டுக்கு, பஞ்சாப் அணி பயிற்சியாளர் சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து டுவிட்டரில் சேவாக் கூறியிருப்பதாவது:-

  நாங்கள் எதிர்பார்த்த முடிவு வரவில்லை, இருப்பினும் முதல் பகுதி போட்டிகளின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. 7ல் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இப்போது ஒரு வாரம் ஒய்வு கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் கடின முயற்சி மூலம் இளம் வீரரான அன்கித் ராஜ்பூட் 5 விக்கெட் வீழ்த்திய முதல் பஞ்சாப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

  இவ்வாறு சேவாக் கூறியுள்ளார். #VIVOIPL #SRHvKXIP #VirenderSehwag #AnkitRajpoot
  Next Story
  ×