என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக்- மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தியது பார்சிலோனா
    X

    சாம்பியன்ஸ் லீக்- மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தியது பார்சிலோனா

    சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. #UCL #Barcelona #Chelsea
    சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஒரு போட்டியில் பார்சிலோனா - செல்சியா அணிகள் மோதின. இரண்டு லெக்காக நடைபெறும் இந்த சுற்றின் முதல் ஆட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி செல்சிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா 1 கோல்கள் அடித்தனர். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

    2-வது லீக் நேற்று நள்ளிரவு பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 20 நமிடத்தில் மெஸ்சி கொடுத்த பாஸை ஓஸ்மானே டெம்ப்ளே சிறப்பான வகையில் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.



    பார்சிலோனா இரண்டு கோல்கள் அடித்த போதிலும், செல்சி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். அடிக்கடி அந்த அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பார்சிலோனா தடுப்பாட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பரால் செல்சியின் வாய்ப்புகள் கோலாக மாறவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் 3-0 என பார்சிலோனா வலுவான முன்னிலையை பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது. முதல் லெக்கில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால், ஒட்டுமொத்தமாக 4-1 என பார்சிலோனா வெற்றி பெற்றது. நான்கு கோலில் மூன்று கோல்களை மெஸ்சி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் செல்சியாவிற்கு எதிரான 8 ஆட்டங்களில் மெஸ்சி கோல் அடித்தது கிடையாது.



    பேயர்ன் முனிச் 8-1 என பெஸிக்டாஸ் அணியையும், மான்செஸ்டர் யுனைடெட்டை 2-1 என செவியாவும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. #UCL #Barcelona #Chelsea #MUFC
    Next Story
    ×