search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து - புனேவை வீழ்த்தியது கோவா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து - புனேவை வீழ்த்தியது கோவா

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் புனே அணியை 4-0 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தியது.
    புனே:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் புனே அணியை 4-0 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தியது.
     
    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புனேவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே மற்றும் கோவா அணிகள் மோதின.

    போட்டியின் தொடக்கத்தில் இருந்தே கோவா அணியினர் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் புருனோ 28-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் கோவா அணியினர் அபாரமாக விளையாடினர். கோவா அணியின் ஹியுகோ பவுமஸ் 47-வது நிமிடத்தில் ஒரு கோலும், பெரன் கரோமினஸ் 58 மற்றும் 65-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் என இரண்டு கோல் அடித்தார்.   

    கோவா அணியினரின் ஆட்டத்துக்கு புனே அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே, இறுதியில் கோவா அணி புனே அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதையடுத்து, கோவா அணி 16 ஆட்டங்களில் 7 வெற்றி, 6 தோல்வி, 3 டிரா என 24 புள்ளிகள் எடுத்து பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. ஆனால், புனே அணி 17 ஆட்டங்களில் 9 வெற்றி, 6 தோல்வி, 2 டிரா என 29 புள்ளிகள் எடுத்து பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த மற்றொரு போட்டியில் பெங்களுரு மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 2-0 என்ற கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து, பெங்களுரு அணி 17 ஆட்டங்களில் 12 வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என 37 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 
    Next Story
    ×