என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
2-வது ஒருநாள்: தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டியது இந்தியா
By
மாலை மலர்4 Feb 2018 10:41 AM GMT (Updated: 4 Feb 2018 10:41 AM GMT)

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சாஹல் (5), குல்தீப் யாதவ் (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா அணி 118 ரன்னில் சுருண்டது. #SAvIND #Chahal
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந்தேதி டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிசிஸ்க்கு பதிலாக அறிமுக வீரர் கயா சோண்டோ இடம்பிடித்தார். அதேபோல் ஆல்ரவுண்டர் பெலுக்வாயோவிற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி இடம்பிடித்தார்.

அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 10-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் அம்லா ஆட்டமிழந்தார். பந்து பேட்டில் உரசி டோனியிடம் தஞ்சம் அடைந்தது. நடுவர் விக்கெட் என்றதும், அம்லா ‘ரிவியூ’ கேட்டார். ஆனால் பந்து பேட்டில் உரசிச் சென்றது தெளிவாக தெரிந்தது. இதனால் தென்ஆப்பிரக்கா ‘ரிவியூ’-வை இழந்தது.

அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். டி காக் 20 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் அவுட்டாகிய சிறிது நேரத்தில் மார்கிராம் 8 ரன்கள் எடுத்த நிலையிலும், மில்லர் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.
6-வது விக்கெட்டுக்கு டுமினி உடன் சோண்டா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது சோண்டா 25 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். 107 ரன்னாக இருக்கும்போது டுமினி 25 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
அதன்பின் வந்த ரபாடா (1), மோர்கல் (1), இம்ரான் தாஹிர் (0) அடுத்தடுத்து வெளியேற, கடைசி விக்கெட்டாக கிறிஸ் மோரிஸ் 14 ரன்கள் எடுத்து சாஹல் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 118 ரன்னில் சுருண்டது.

சாஹல் அபாரமாக பந்து வீசி 8.2 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 6 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. #INDvSA #CenturionODI

Next Story
×