என் மலர்

  செய்திகள்

  வீரர்களின் ஒப்பந்த முறையை மாற்றி அமைத்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்
  X

  வீரர்களின் ஒப்பந்த முறையை மாற்றி அமைத்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் ஒப்பந்த முறையை மாற்றி அமைத்துள்ளது. இதில் ஐந்து வீரர்கள் மட்டுமே முக்கியத்தும் பெற்றுள்ளனர். #WI
  வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களான பொல்லார்டு, சுனில் நரைன், ரசல், டேரன் பிராவோ போன்ற வீரர்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்காமல் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட செல்கிறார்கள்.

  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்களை ஏ,பி,சி என்ற வகையில பிரித்து வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்யும். இதில் இடம்பிடிக்கும் அனைத்து வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்தின் சலுகைகள் கிடைக்கும்.

  இந்த முறைப்படி விளையாடாமல் இருக்கும் சில வீரர்களுக்கு அதிக அளவு பயன்கிடைக்கிறது. இதை தடுக்கவும், டி20 லீக் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுவதை தடுக்கவும் வீரர்களின் ஒப்பந்த முறையை மாற்றியமைத்துள்ளது.

  அதன்படி அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள், டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடும் வீரர்கள் மற்றும் 50, 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் என மாற்றி அமைத்துள்ளது.  அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாடும் பிரிவில் (All-format contracts) ஜேசன் ஹோல்டர், கேப்ரியல், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், தேவேந்திர பிஷூ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

  டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பிரிவில் (Red-ball contracts) கிரேக் பிராத்வைட், ராஸ்டன் சேஸ், ஸேன் டவ்ரிச், ஜெர்மைன் பிளாக்வுட், மிகுயெல் கம்மின்ஸ், ஜோமெல் வாரிகன் இடம்பிடித்துள்ளனர்.

  50, 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் பிரிவில் (White-ball contracts) கார்லோஸ் பிராத்வைட், அஷ்லே நர்ஸ், ஜேசன் மொகமது, எவின் லெவிஸ், ரோவ்மன் பொவேல். இந்த புதிய ஒப்பந்த முறை வரும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.
  Next Story
  ×