என் மலர்

  செய்திகள்

  பிளிஸ்சிஸ், ஸ்டெயின் திரும்பும்போது தென்ஆப்பிரிக்க அணிக்கு ‘தலைவலி’ - டிவில்லியர்ஸ் சொல்கிறார்
  X

  பிளிஸ்சிஸ், ஸ்டெயின் திரும்பும்போது தென்ஆப்பிரிக்க அணிக்கு ‘தலைவலி’ - டிவில்லியர்ஸ் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேப்டன் பிளிஸ்சிஸ், ஸ்டெயின் அணிக்கு திரும்பும் போது, இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் களம் காணும் லெவன் அணிக்கு யாரை தேர்வு செய்வது என்பது தலைவலியான விஷயம் என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
  போர்ட் எலிசபெத்:

  போர்ட் எலிசபெத்தில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. 4 நாள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியை தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாளிலேயே முடிவுக்கு கொண்டு வந்தது.

  தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் இந்த டெஸ்டுக்கு டிவில்லியர்ஸ் கேப்டனாக செயல்பட்டார். வெற்றிக்கு பிறகு டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘ஸ்டெயின் உடல்தகுதியை எட்டி, கேப்டன் பிளிஸ்சிஸ்சும் அணிக்கு திரும்பும் போது, இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் (ஜனவரி 5-ந்தேதி தொடங்குகிறது) யார்-யாருக்கு இடம் கிட்டும் என்பது எனக்கு தெரியாது. களம் காணும் லெவன் அணிக்கு யாரை தேர்வு செய்வது என்பது கொஞ்சம் தலைவலியான விஷயம் தான். எல்லா வீரர்களும் நல்ல பார்மில் இருப்பது போல் தான் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சிக்கல் எனக்கு இல்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் 4-வது வரிசையில் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். இடம் கிடைக்காவிட்டால் தண்ணீர் பாட்டில்களை தூக்கிக்கொண்டு வருவேன். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்றார்.

  Next Story
  ×