என் மலர்

  செய்திகள்

  பேட்மிண்டனில் நம்பர் ஒன் இடத்தை குறிவைக்கும் பிவி சிந்து
  X

  பேட்மிண்டனில் நம்பர் ஒன் இடத்தை குறிவைக்கும் பிவி சிந்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து முதல் இடத்தை பிடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து, கடந்த சில நாட்களுக்கு முன் உலக பேட்மிண்டன் சூப்பர் சீரிஸில் 2-வது இடத்தைப் பிடித்தார். இந்த வருடம் சையத் மோடி ஜி.பி.ஜி., இந்தியா ஓபன், கொரியா ஓபன் ஆகியவற்றைக் கைப்பற்றினார். ஹாங்காங், துபாய் சூப்பர் சீரிஸில் 2-வது இடம்பிடித்தார்.

  பேட்மிண்ட்ன உலகத் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறிய பிவி சிந்து, தற்போது 3-வது இடத்தில் உள்ளார். 2018 சீசனில் முதல் இடத்தை பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பிவி சிந்து கூறுகையில் ‘‘வரும் சீசனில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. தற்போது நான் 3-வது இடத்தில் உள்ளேன். இது தொடரை எப்படி விளையாடுகிறேன் என்பதை சார்ந்தது. நாம் சிறப்பாக விளையாடினால், தரவரிசை தானாக முன்னேறும். இதனால் நான் தரவரிசையை பற்றி யோசிப்பதில்லை. நான் என்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நம்பர் ஒன் இடம் தானாக என்னைத் தேடிவரும்’’ என்றார்.
  Next Story
  ×