search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின், ஹர்பஜன் சிங்கிற்கு இடையிலான வேறுபாடு என்ன?; ஹெய்டன் விளக்கம்
    X

    அஸ்வின், ஹர்பஜன் சிங்கிற்கு இடையிலான வேறுபாடு என்ன?; ஹெய்டன் விளக்கம்

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான ஹெய்டன், இ்ந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோரை ஒப்பிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கை விட அஸ்வினுக்கு வேகப்பந்து வீச்சு துணை உள்ளது என கூறியுள்ளார்.
    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன்மூலம், மொத்தம் 54 டெஸ்டில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிவேகமாக 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். இன்னும் 5 வருடங்கள் விளையாடினால் 600 விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்த்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    அஸ்வின் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக உருவாகுவதற்கு முன் ஹர்பஜன் சிங் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.



    இவர்கள் இருவரையும் தற்போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான ஹெய்டன் ஒப்பிட்டுள்ளார். அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் குறித்து ஹெய்டன் கூறுகையில் ‘‘பெரும்பாலும் புள்ளி விவரங்கள் பொய் என்று நினைக்கிறவன் நான். ஆனால், அஸ்வின் போன்று 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்ததற்கு நாம் மரியாதை கொடுத்தாக வேண்டும்.

    அஸ்வின் இன்னும் ஐந்தாண்டுகள் விளையாடினால், அவரது தலைமுறையில் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்வார். ஹர்பஜன் சிங்கை போல் அஸ்வினும் மாஸ்டர்புல் அறிவை பெற்றுள்ளார். ஆனால் ஹர்பஜன் சிங்கை போன்று தாக்குதல் ஆஃப் ஸ்பின்னர் அல்ல.

    ஆனால், ஹர்பஜன் சிங்கைபோல் அஸ்வின் தாக்குதல் பந்து வீச்சை தொடர வேண்யடிதில்லை. எனது தலைமுறைக்குப்பின் இந்திய அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதால், சிறப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றம் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சு மற்றும் அஸ்வின் உடன் ஜடேஜா இணைந்து சிறப்பாக பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தனது வேலையை அஸ்வின் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.



    ஹர்பஜன் சிங் ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சாளர். குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவார். ஹர்பஜன் சிங் விக்கெட் வீழ்த்தாவிடில், இந்திய அணி திண்டாடும். வெங்கடேஷ் பிரசாத் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கவில்லை. ஹர்பஜன் சிங் தனக்கென தனி பாணியை உருவாக்குபவர்.

    ஜாகீர் கான் அல்லது ஜவகல் ஸ்ரீநாத் சிறந்த பந்து வீச்சாளர்கள். ஆனால், தற்போதுள்ள பந்து வீச்சாளர்களைபோல் அவர்கள் எதிரணியை மிரட்டவில்லை’’ என்றார்.
    Next Story
    ×