என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மும்பை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா காலிறுதியில் தோல்வி
By
மாலை மலர்24 Nov 2017 8:26 PM GMT (Updated: 24 Nov 2017 8:26 PM GMT)

மகளிருக்கான மும்பை ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா தோல்வியடைந்து வெளியேறினார்.
மும்பை:
மகளிருக்கான மும்பை ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. 32 வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த தொடருக்கு இந்தியா சார்பில் நான்கு வீராங்கனைகள் வைல்ட் கார்ட் முறையில் தகுதிபெற்றனர். இதில் அன்கிதா ரெய்னா மட்டுமே முதல் சுற்று போட்டியில் பெற்றார்.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் அன்கிதா ரெய்னா, தாய்லாந்தின் பியாங்டார்ன் பிலிப்யூச்சை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அன்கிதா, பிரான்சின் அமாண்டலின் ஹீசை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை அமாண்டலின் ஹீஸ் 6-3 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இரு வீராங்கனைகளும் சரிசமமான ஆட்டத்தை வெளிகாட்டினர்.
இருப்பினும் இரண்டாவது செட்டை அமாண்டலின் ஹீஸ் 7-6 என போராடி கைப்பற்றினார். இதன்மூலம் ஹீஸ், 6-3, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

Next Story
×