என் மலர்

  செய்திகள்

  சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பிவி சிந்து தோல்வி
  X

  சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பிவி சிந்து தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
  சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் இந்தியா பிவி சிந்து, சீனாவின் கவோ பாஞ்சியை எதிர்கொண்டார்.

  சொந்த நாட்டைச் சேர்ந்த கவோ பாஞ்சிற்கு எதிராக பிவி சிந்து திண்டாடினார். இதனால் முதல் செட்டை 11-21 என இழந்த பிவி சிந்து, 2-வது செட்டை 10-21 என எளிதில் இழந்து காலிறுதியோடு ஏமாற்றம் அடைந்தார்.  இதற்கு முன் சாய்னா நேவால், பிரனாய் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளோடு வெளியேறினார்கள். தற்போது பிவி சிந்து தோல்வியடைந்துள்ளதால் சீன ஓபனில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.

  மற்றொரு போட்டியில் கரோலினா மரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
  Next Story
  ×