என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நடால், சிலிக் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நடால், சிலிக் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

    பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களான ரபேல் நடால், மரின் சிலிக் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

    பாரிஸ்: 

    46-வது சீசன் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. 

    இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், தென்கொரியாவின் சங் ஹையோனை எதிர்கொண்டார். இப்போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் மூன்றாம் நிலை வீரரான குரோசியாவின் மரின் சிலிக், சக நாட்டு வீரரான போர்னோ கொரிக்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிலிக் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் போர்னோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.


    திமித்ரோ

    மற்றொரு இரண்டாவது சுற்று போட்டியில் ஆறாம் நிலை வீரரான திமித்ரோ, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ரிச்சர்ட் கேஸ்கட்டை வீழ்த்தினார்.

    ஏழாம் நிலை வீரரான கோஃபின், பிரான்சின் அட்ரியன் மன்னரினோவை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில், கோஃபின் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


    கோஃபின்
    Next Story
    ×