என் மலர்

  செய்திகள்

  புரோ கபடி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்: தமிழ் தலைவாஸ்-புனே அணிகள் மோதல்
  X

  புரோ கபடி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்: தமிழ் தலைவாஸ்-புனே அணிகள் மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. இதில் தமிழ் தலைவாஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

  சென்னை:

  5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.
  நேற்றுடன் 9-வது நகரத்தில் (டெல்லி) லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. 

  சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 5-ந் தேதி வரை நடைபெறும் சென்னை சுற்றில் 11 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் 6 ஆட்டங்களும் அடங்கும்.

  சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் 100-வது லீக் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, தீபக் ஹூடா தலைமையிலான புனேரி பால்டன் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

  ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள புனேரி பால்டன் அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 47 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைவாஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் 32 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.

  புனேரி பால்டன் அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் முறையே அரியானா அணியை 2 முறையும், டெல்லி அணியையும் வீழ்த்திய கையுடன் இந்த மோதலில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி கடைசி 2 ஆட்டங்களில் முறையே பெங்கால், குஜராத் அணிகளை சாய்த்த நம்பிக்கையுடன் புனே அணியை எதிர்கொள்கிறது. சிறந்த வீரர்களை கொண்ட இந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

  இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சுகேஷ் ஹெக்டே தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி, பர்தீப் நார்வால் தலைமையிலான நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சந்திக்கிறது. போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


  Next Story
  ×