என் மலர்
செய்திகள்

4-வது ஒருநாள் போட்டி: பெங்களூர் ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகம் - யசுவேந்திர சஹால்
பெங்களூர் ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என இந்திய சுழற்பந்து விச்சாளர் யசுவேந்திர சஹால் கூறியுள்ளார்.
பெங்களூர்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று பிற்பகல் நடக்கிறது.
வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது.
தற்போது 4-வது ஆட்டத்திலும் வெல்லும் ஆர்வத்துடன் திகழ்கிறது. தொடர்ச்சியாக 9 ஆட்டத்தில் வென்ற இந்திய அணி 10-வது போட்டியில் வென்று புதிய வரலாறு படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியிலாவது வென்று பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் உள்ளது.
இன்றைய ஆட்டம் தொடர்பாக இந்திய அணி சுழற்பந்து வீரர் யசுவேந்திர சஹால் கூறியதாவது:-
பெங்களூர் ஆடுகளத்தின் தன்மை மாறி இருப்பதை பார்த்து இருக்கிறேன். இந்த ஆடுகளம் சுழற்பந்து வீரர்களுக்கு மேலும் உதவியாக இருக்கும். இங்குள்ள ஆடுகள தன்மை ஆஸ்திரேலியாவை விட நமக்கு சாதகமாக அமையும்.
நானும், குல்தீப் யாதவும் எப்போதுமே திட்டமிட்டு அதற்கு ஏற்ற வகையில் பந்துவீசி வருகிறோம். எப்படி வீச வேண்டும் என்பதை ஒருவருக்கொருவர் புரிந்து வைத்துள்ளோம். எங்களது கூட்டணி நன்றாக இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆடுகளத்தின் தன்மை குறித்து விவாதிப்போம்.
மேக்ஸ் வெலுக்கு ஸ்டம்பை நோக்கி பந்து வீசுவதைவிட ஆப்ஸ்டம்புக்கு வெளியே வீசுவதே சிறந்தது. 2 அல்லது 3 பந்துகளில் ரன் எடுக்காவிட்டால் ஆக்ரோஷமாகிவிடுவார். இதை பயன்படுத்தி அவுட் செய்வது எளிதானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த தொடரில் மேக்ஸ்வெலை மூன்று முறை சஹால் அவுட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடும் அவர் இந்த ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 27 வயதான யசுவேந்திர சஹால் 3 ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

Next Story