என் மலர்
செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெண்கல பதக்கம் வென்றார் கவுரவ் பிதுரி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவின் கவுரவ் பிதுரி வெண்கல பதக்கம் வென்றார்.
ஹம்பர்க்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்து 25-ந்தேதி தொடங்கிய இந்த தொடர் வருகிற 2-ம்தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரில் 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கவுரவ் பிதுரி கலந்து கொண்டார். இதுதான் இவருக்கு முதல் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடராகும். முதல் தொடரிலேயே கவுரவ் பிதுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கவுரவ் பிதுரி, காலிறுதியில் துனிசியா வீரர் பிலெல் ஹம்தியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கவுரவ், அமெரிக்காவின் டியூக் ரகனை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், கவுரவ் தோல்வியடைந்து, இத்தொடரில் வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார். இதன்மூலம் அறிமுக தொடரிலேயே பதக்கம் வெல்லும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய வீரர்கள் விகாஸ் (2011), விஜேந்தர் சிங் (2009), ஷிப தபா (2015) ஆகியோரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கமே வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






