search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதியிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டார் மாரியப்பன்
    X

    ஜனாதிபதியிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டார் மாரியப்பன்

    ஜனாதிபதி மாளிகையில் இன்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. பாராலிம்பிக்கில் சாதனைப் படைத்த தமிழக வீரர் மாரியப்பன் ஜனாதிபதியிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.
    விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தும். அவ்வகையில் இந்த ஆண்டுக்காள விருதுகளுக்கு தகுதியான வீரர்-வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதில் தகுதியான வீரர்களை பரிந்துரை குழு தேர்வு செய்து மத்திய விளையாட்டுத் துறைக்கு அனுப்பியது.

    தேர்வான வீரர்களுக்கு இந்தியாவின் விளையாட்டுத் தினமான இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    பாராலிம்பிக்கில் சாதனைப் படைத்த தமிழக வீரர் மாரியப்பன் ஜனாதிபதியிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டார். இவருடன் மேலும் 16 பேர் அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டனர்.


    பாராலிம்பிக் வீரர் தேவேந்திர ஜஹாரியா

    விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஹாக்கி வீரர் சர்தார் சிங், பாராலிம்பிக் வீரர் தேவேந்திரி ஜஹாரியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


    ஹாக்கி வீரர் சர்தார் சிங்

    இளையோர் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்ட ரிலையன்ஸ் பவுண்டேசனுக்கு ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நீடா அம்பானி பெற்றுக் கொண்டார். 
    Next Story
    ×