search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி
    X

    ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி

    டோனி 108 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார்.
    ஆன்டிகுவா,

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) இந்தியா இரண்டில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், நேற்று 4-வது போட்டியில் களமிறங்கியது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் களம் இறங்கினார்கள்.

    முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க வீரர்களாக ரகானே, தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். தவான் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    இதனால் இந்தியா 12.4 ஓவரில் 47 ரன்கள் எடுத்த நிலையில் மூன்று விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அடுத்து ரகானேவுடன், டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் மந்தமாக விளையாடியது. ரகானே 72 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.

    மறுமுனையில டோனி ஆமை வேகத்தில் விளையாடினார். இதனால் அவர் அரைசம் அடிக்க 108 பந்துகள் எடுத்துக் கொண்டார். இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடங்கும். 49-வது ஓவரின் கடைசி பந்தில் டோனி அவுட்டானதும், இந்தியா 49.4 ஓவரில் 178 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரகானே - டோனி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 பந்தில் 54 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இந்தியாவின் தோல்விக்கு டோனியின் மந்தமான ஆட்டமும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. அத்துடன் அரைசதம் அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையையும் தன்வசமாக்கியுள்ளார். சடகோபன் ரமேஷ் கடந்த 1999-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக 117  பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.



    கங்குலி 2001-ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக 105 பந்தில் அரைசதம் அடித்து இந்திய வீரர் ஒருவர் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற மோசமான சாதனையாக இருந்து. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மோசமான சாதனைக்கு டோனி சொந்தக்காரராகியுள்ளார்.

    கங்குலி 2007-ம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிராக 104 பந்தில் அரைசதம் அடித்து 3-வது இடத்தையும் பிடித்திருந்தார். தற்போது, 3-வது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
    Next Story
    ×