என் மலர்

  செய்திகள்

  பெண்கள் உலகக்கோப்பை: பாகிஸ்தானை 74 ரன்னில் சுருட்டி இந்தியா ஹாட்ரிக் வெற்றி
  X

  பெண்கள் உலகக்கோப்பை: பாகிஸ்தானை 74 ரன்னில் சுருட்டி இந்தியா ஹாட்ரிக் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 74 ரன்னில் சுருட்டி இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
  பெண்கள் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி பூனம் ரவுட் (47), சுஷ்மா வர்மா (33), தீப்தி ஷர்மா (28) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நஷ்ரா சந்து அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

  பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

  2-வது ஓவரின் 4-வது பந்தில் ஆயிஷா சபர் 1 ரன் எடுத்த நிலையில் ஏக்தா பிஸ்ட் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ஜவேரியா கான் 6 ரன்கள் எடுத்த நிலையில் கோஸ்வாமி பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 4-வது வீராங்கனையாக களம் இறங்கிய சித்ர நவாஸ், அடுத்து வந்த ஐரம் ஜாவித் ஆகியோரை ரன்ஏதும் எடுக்க விடாமல் அப்படியே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் பிஸ்ட். இதனால் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.


  விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கோஸ்வாமி

  முதல் நிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தபின், கடைநிலை வீராங்கனைகளால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. நயின் அபிடி (5), நஷ்ரா சந்து (1), டயனா பெய்க் (0) அடுத்தடுத்து வெளியேற, தொடக்க வீராங்கனை நஹிடா கான் 23 ரன்னும், கேப்டன் சானா மிர் 29 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 38.1 ஓவரில் 74 ரன்களில் சுருண்டது. இவர்கள் இருவரையும் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

  இதனால் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஏக்தா பிஸ்ட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

  இந்த வெற்றி மூலம் இந்தியா தொடர்ந்து மூன்று வெற்றிகளை ருசித்துள்ளது.
  Next Story
  ×