என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல்.லில் 3-வது முறையாக சாம்பியன்: மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசு
  X

  ஐ.பி.எல்.லில் 3-வது முறையாக சாம்பியன்: மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். கோப்பையை மும்பை அணி 3-வது முறையாக வென்று சாதனை படைத்தது. சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
  ஐதராபாத்:

  ஐதராபாத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்னே எடுக்க முடிந்தது.

  கர்ணல் பாண்ட்யா அதிகபட்சமாக 38 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோகித்சர்மா 22 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஜெய்தேவ் உனட்கட், ஆடம் ஜம்பா, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

  130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன்னில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.  ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டபோது 2 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் புனே அணி 1 ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது.

  கேப்டன் சுமித் 50 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 38 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ஜான்சன் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதற்கு 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.  ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையை மும்பை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலா 2 தடவை வென்று இருந்தன.

  சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

  மயிரிழையில் ஐ.பி.எல். கோப்பையை இழந்து 2-வது இடத்தை பிடித்த ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்பட்டது.  அதிக ரன்கள் எடுத்த வார்னர் (641 ரன்) ஆரஞ்சு நிற தொப்பியையும், அதிக விக்கெட் எடுத்த புவனேஸ்வர்குமார் (26 விக்கெட்) ஊதா நிற தொப்பியையும் கைப்பற்றினார்கள். ஐதராபாத் அணியை சேர்ந்த இருவரும் தலா ரூ.10 லட்சும் பரிசு தொகையை பெற்றனர்.
  Next Story
  ×