என் மலர்

  செய்திகள்

  பிளேஆஃப் சுற்று போட்டிகள் கைவிடப்பட்டால் ‘ரிசர்வ் டே’ தேவை: ஷாருக் கான் கருத்து
  X

  பிளேஆஃப் சுற்று போட்டிகள் கைவிடப்பட்டால் ‘ரிசர்வ் டே’ தேவை: ஷாருக் கான் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். தொடரில் பிளேஆஃப்ஸ் போட்டிகள் மழைக்காரணமாக கைவிடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ‘ரிசர்வ் டே’ தேவை என ஷாருக் கான் கூறியுள்ளார்.
  ஐ.பி.எல். தொடரில் நாக்அவுட் போட்டியான எலிமினேட்டர் சுற்று நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 128 ரன்கள் சேர்த்தது.

  முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் கனமழை பெய்தது. நாக்அவுட் போட்டி என்பதால் நீண்ட நேரம் காத்திருந்து போட்டியை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்கள் விளையாடும்படி முடிவு செய்யப்பட்டது. அதன்படி 6 ஓவரில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கொல்கத்தா அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொல்கத்தா அணி இந்த ரன்னை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவிலிபையர் 2-க்கு முன்னேறியது.  பொதுவாக ஐ.பி.எல். தொடரில் 8 மணிக்கு தொடங்கும் போட்டி சுமார் 9.40 மணியளவில் முதல் பேட்டிங் முடிந்துவிடும். 2-வது பேட்டிங் 10 மணியளவில் ஆரம்பித்து 11.40-ற்கு முடிந்துவிடும். நேற்று 6 ஒவர்களை விளையாட கொல்கத்தா அணி நள்ளிரவு 1 மணியளவில் களம் இறங்கியது. 1.30 மணிக்குப் பிறகுதான் போட்டி முடிந்தது.  இதனால் பெரும்பாலான ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டனர். நள்ளிரவு முடிந்து ரசிகர்கள் வீடுகளுக்கு திரும்ப மிகவும் சிரமம் ஏற்பட்டது.

  இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிளேஆஃப்ஸ் சுற்று போட்டிகள் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் ‘ரிசர்வ் டே’ என அழைக்கப்படும் அடுத்த நாள் போட்டியை நடத்த வேண்டும் என்று கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  இதுகுறித்து ஷாருக்கான தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொல்கத்தா அணி வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், பிளேஆஃப்ஸ் சுற்று போட்டிகளின்போது போட்டி கைவிடக்கூடிய நிலை ஏற்பட்டால், ‘ரிசர்வ் டே’ தேவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×