என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் மொகமது நவாசுக்கு 2 மாதம் தடை
  X

  பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் மொகமது நவாசுக்கு 2 மாதம் தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில், மொகமது நவாஸ் குறிப்பிட்ட அறிக்கையை வழங்காததால் இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. துபாயில் நடைபெற்ற இந்த தொடரின்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சில வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

  அதில் சுழற்பந்து வீச்சாளர் மொகமது நவாஸும் ஒருவர். இவர் பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக மூன்று டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிவர்.  அவர் மீதான புகார் குறித்து அறிக்கை அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால், நவாஸ் குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

  இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு இரண்டு மாதம் தடைவிதித்துள்ளது. இந்த தடைக்காலம் மே 16-ந்தேதியில் இருந்த நடைமுறைக்கு வருகிறது. அத்துடன் பாகிஸ்தான் பண மதிப்பிற்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
  Next Story
  ×