என் மலர்

  செய்திகள்

  நியூசிலாந்துக்கு எதிரான பெண்கள் ஆக்கி: இந்திய அணிக்கு 3-வது தோல்வி
  X

  நியூசிலாந்துக்கு எதிரான பெண்கள் ஆக்கி: இந்திய அணிக்கு 3-வது தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்துக்கு எதிரான பெண்கள் ஆக்கி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது தோல்வி இதுவாகும்.
  புகெகோக் :

  உலக லீக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

  இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது தோல்வி இதுவாகும். இந்திய அணி தரப்பில் தீப் கிரேஸ் எக்கா 10-வது நிமிடத்திலும், மோனிகா 59-வது நிமிடத்திலும் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தனர்.

  நியூசிலாந்து அணி தரப்பில் எல்லா குன்சன் 13-வது நிமிடத்திலும், டீனா ரிட்ஷி 15-வது நிமிடத்திலும், ஷிலோக் கோன் 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் 2-8 என்ற கோல் கணக்கிலும் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு இருந்தது.
  Next Story
  ×