என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    ரியோ ஒலிம்பிக்கில் 100 பதக்கங்கள் வென்று அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அந்த அணி நேற்று 100-வது பதக்கத்தை தொட்டது. 35 தங்கம், 33 வெள்ளி, 32 வெண்கலம் ஆக மொத்தம் 100 பதக்கம் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது.

    இங்கிலாந்து 22 தங்கம், 21 வெள்ளி, 13 வெண்கலம் ஆக மொத்தம் 56 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், சீனா 20 தங்கம், 16 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.
    ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பதக்கத்தை உறுதிப்படுத்திய பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஐதராபாத் பேட்மின்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் தெரிவித்துள்ளார்.
    ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஐதராபாத் பேட்மின்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் தெரிவித்துள்ளார்.

    ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வீரர்- வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் சொகுசு கார் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய சம்பவத்துக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.
    ரியோ டி ஜெனீரோ:

    பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய சம்பவத்துக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.

    ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் கழிப்பறையை உடைத்து, சூறையாடியுள்ளனர்.

    இதனால் ஏற்பட்ட சேதாரத்துக்கும் பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்படி பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள் வற்புறுத்தவே இழப்பீடாக பணத்தை கட்டிவிட்டு, அங்கிருந்து விடுபட்டுவந்த அந்த நீச்சல் வீரர்கள், தங்களை சிலர் துப்பாக்கி முனையில் வழிமறித்து, பணத்தை கொள்ளையடித்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, ரியோ டி ஜெனீரோ போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விபரங்கள் யாவும் தெரியவந்தது. போலியான புகார் தெரிவித்து, தங்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பிரேசில் நாட்டு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில், அமெரிக்காவுக்கு செல்வதற்காக விமானம் ஏறப்போன அவர்களை பிரேசில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, வைத்திருப்பதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், தங்கள் நாட்டு நீச்சல் வீரர்களின் செயலுக்காக பிரேசில் நாட்டு மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஸ்காட் பிளாக்மன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த வீரர்களின் நடவடிக்கை அமெரிக்க விளையாட்டு அணிக்கு ஏற்புடையது அல்ல’ என குறிப்பிட்டுள்ளார்.
    பெண் குழந்தைகள் குறைவாக உள்ள அரியானா மாநிலத்தில் இருந்து உருவாகிய மல்யுத்த முத்து தான், இந்த சாக்‌ஷி மாலிக்.
    பாலின விகிதாச்சாரம் குறைவாக இருக்கும் மாநிலங்களில் அரியானாவும் ஒன்று. அதாவது இங்கு ஆயிரம் ஆண்களுக்கு, 900 பெண்களே இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் குறைவாக உள்ள அந்த மாநிலத்தில் இருந்து உருவாகிய மல்யுத்த முத்து தான், இந்த சாக்‌ஷி மாலிக்.

    ரோட்டாகில் சாக்‌ஷியின் வீடு இப்போது ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று திருவிழா போல் களை கட்டியுள்ளது. பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். பரவசப்படும் சாக்‌ஷியின் தந்தை சுக்பிர், தாயார் சுதேஷ் எல்லையில்லாத பூரிப்பில் மிதக்கிறார்கள். ஆனந்த கண்ணீரும் எட்டிப்பார்க்கிறது. உறவினர்களும், நண்பர்களும் அவரது வீட்டுக்கு படையெடுத்து வருகிறார்கள். இத்தகைய பேரானந்தத்தை ஒரே நாளில் கொண்டு வந்து விட்ட சாக்‌ஷி மாலிக் கடந்து வந்த பாதை சற்று கடினமானது தான்.

    சாக்‌ஷியின் தாத்தா ஒரு மல்யுத்த வீரர். அதன் தாக்கம் அப்படியே சாக்‌ஷியிடம் ஒட்டிக்கொண்டது. 12-வது வயதில் மல்யுத்த பயிற்சியை ஆரம்பித்தார். ஒலிம்பிக்கில் இரண்டு தங்கம் வென்றவரான சுஷில்குமார் தான் அவரது முன்மாதிரி. ஆனால் அரியானாவில் அந்த சமயத்தில் பெண்கள் மல்யுத்தத்தில் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. சாக்‌ஷியின் உறவினர்களும், இது ‘ஆண்களுக்குரிய விளையாட்டு, இப்படியே விட்டால் அவளது வாழ்க்கை பாழாகி விடும்’ என்று சகட்டு மேனிக்கு தூபம் போட்டனர். ஆனாலும் மல்யுத்தத்தை உயிர்மூச்சாக நினைத்த சாக்‌ஷி அதை விடுவதாக இல்லை. மகளின் விருப்பத்துக்கு தடை ஏதும் சொல்லாத அவரது பெற்றோர் எல்லா வகையிலும் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.

    எதிர்ப்புக்கு இடையே 2002-ம் ஆண்டு ஈஸ்வர் தாஹியா என்ற பயிற்சியாளரிடம் சேர்ந்த சாக்‌ஷி, அங்குள்ள சோட்டு ராம் ஸ்டேடியத்தில் ஆண்களுடன் இணைந்து பயிற்சி களத்தில் ஈடுபட்டு தன்னை மெருகேற்றினார். பயிற்சிக்கு வீராங்கனையை அனுமதித்ததால், தாஹியாவுக்கு எதிராக உள்ளூர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    இப்படி பல்வேறு தடைக்கற்களை கடந்த சாக்‌ஷி மாலிக் 2013-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும், 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2015-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்றார். ஒலிம்பிக் போட்டிக்கு புறப்படும் முன்பு, ‘நிச்சயம் பதக்கத்துடன் வருவேன்’ என்று பெற்றோருக்கு அளித்த வாக்குறுதியை பெரும்பாடு பட்டு காப்பாற்றி விட்டார். மல்யுத்தத்தில் பெண்களும் ராணியாக வலம் வரலாம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

    “சிறு வயதில், ஒலிம்பிக் போட்டி என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது. அப்போது விளையாட்டு வீராங்கனையாக மாறி, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. ஏனெனில் இந்திய பிரதிநிதியாக போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றால் விமானத்தில் பறக்க முடியுமே” என்று கடந்த கால நினைவுகளை அசைப்பட்ட சாக்‌ஷி மாலிக், இனி அடிக்கடி விமானத்தில் பறந்து கொண்டே இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் தங்கப்பதக்கத்தை வென்றார்.
    ரியோ டி ஜெனீரோ :

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் 21.78 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கப்பதக்கம் வென்று இருந்த எலைன் தாம்சன் ஜமைக்காவின் புதிய தங்க மங்கையாக உருவெடுத்துள்ளார்.

    இதில் நெதர்லாந்து வீராங் கனை டாப்னே சிப்பெர்ஸ் (21.88 வினாடி) வெள்ளிப்பதக்கமும், அமெரிக்க வீராங்கனை டோரி போவி (22.15 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
    ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் நாளை மோதுகிறது.
    ரியோ டி ஜெனீரோ:

    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து அரைஇறுதியில் போட்டியை நடத்தும் பிரேசில் 6-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராசை துவம்சம் செய்தது. பிரேசில் கேப்டன் நெய்மார் 2 கோல்கள் அடித்தார். இதில் ஆட்டம் தொடங்கிய 15-வது வினாடியிலேயே அடித்த அதிவேக ஒலிம்பிக் கோலும் அடங்கும்.

    மற்றொரு அரைஇறுதியில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. முதல் முறையாக ஒலிம்பிக்கில் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் நாளை மோதுகிறது.
    ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
    ரியோ டி ஜெனீரோ:

    ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.

    பந்தய தூரமான 200 மீட்டரை 19.78 வினாடிகளை ஓடிகடந்த உசேன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

    ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு  தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசேன் போல்ட், இன்று நடைபெறும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார். அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என எதிர்பார்க்கலாம்.
    ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் பபிதா குமாரி தோற்றதால் ‘ரெபசாஜ்’ வாய்ப்பின்றி வெளியேறினார்.
    ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தம் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று மற்றொரு இந்திய வீராங்கனை பபிதா குமாரி களம் இறங்கினார்.

    தொடக்க ஆட்டத்தில் பபிதா 1-5 என்ற புள்ளி கணக்கில் மரியா பிரேவோலராகியிடம் (கிரீஸ்) வீழ்ந்தார். இதன் பின்னர் மரியா பிரேவோலராகி அடுத்து கால்இறுதியில் தோற்றதால் பபிதாகுமாரி ‘ரெபசாஜ்’ வாய்ப்பின்றி வெளியேறினார்.

    ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய சாக்‌ஷி மாலிக் எப்படி ஜெயித்தார், என்ன சாதனைகள் படைத்திருக்கிறார் என்பதையும் அவரது பயோடேட்டாவையும் பார்க்கலாம்.
    ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய சாக்‌ஷி மாலிக் எப்படி ஜெயித்தார், என்ன சாதனைகள் படைத்திருக்கிறார் என்பதையும் அவரது பயோடேட்டாவையும் பார்க்கலாம்.

    அரியானா மாநிலம் ரோட்டாக் மாவட்டத்தில் உள்ள மோக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சாக்‌ஷி மாலிக். 1992-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந்தேதி பிறந்தார். பெற்றோர்: சுக்பிர்-சுதேஷ், சகோதரி சுவாதி, சகோதரர் சச்சின்.

    வயது: 23, உயரம்: 162 சென்டிமீட்டர், எடை: 58 கிலோ

    பதக்கத்துக்கு முத்தமிட, ஒரே நாளில் அதாவது 8 மணி நேரத்தில் 5 வீராங்கனைகளுடன் மல்லுகட்டியிருக்கிறார்.

    தகுதி சுற்று: ஜோஹன்னா மேட்சனுடன் (சுவீடன்) வெற்றி (5-4)

    பிரதான முதலாவது சுற்று: மரியானா செர்டிவாராவுடன் (மால்டோவா) சமன் (5-5). பிறகு எச்சரிக்கை புள்ளியை தவிர்த்து அதிகமான புள்ளிகளை எடுத்ததன் அடிப்படையில் வெற்றி அறிவிப்பு.

    கால்இறுதி: வலெரியா கோப்லோவாவுடன் (ரஷியா) தோல்வி (2-9)

    ‘ரெபசாஜ்’ நேரடி 2-வது சுற்று: ஒர்கோன் புரேவ்டோர்ஜியுடன் (மங்கோலியா) வெற்றி (12-3)

    ‘ரெபசாஜ்’ வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம்: அய்சுலு டைனிபிகோவாவை (கிர்கிஸ்தான்) சாய்த்து (8-5) பதக்கத்தை சூடினார்.

    மல்யுத்தத்தில் தோல்வி அடைவோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது தான் ‘ரெபசாஜ்’ முறை. அதாவது இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வீரர் அல்லது வீராங்கனைகளிடம் முந்தைய ஆட்டங்களில் தோல்வி அடைவோர் மட்டும் ‘ரெபசாஜ்’ மூலம் மீண்டும் ஒரு முறை விளையாடும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். இந்த முறையில் அதிகபட்சமாக வெண்கலம் வெல்ல முடியும். இவ்வாறு வாய்ப்பு பெறுபவர்கள் படிப்படியாக முன்னேறினால், கடைசியில் அரைஇறுதியில் தோற்று காத்திருப்போரிடம் வெண்கலப் பதக்கத்துக்காக கோதாவில் குதிக்க வேண்டும்.

    சாக்‌ஷி மாலிக்குக்கு கால்இறுதியில் ‘செக்’ வைத்த ரஷியாவின் வலெரியா கோப்லோவா இறுதிசுற்றை எட்டியதால், சாக்‌ஷிக்கு மறுவாழ்வு கிட்டியது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அமர்க்களப்படுத்திய சாக்‌ஷி மாலிக், ஒரே நாளில் தேசத்தின் நாயகியாக உச்சத்துக்கு சென்று விட்டார்.

    சாதனைகள் என்னென்ன?

    * நவீன ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மல்யுத்தம் 1896-ம் ஆண்டு முதல் இருந்தாலும் பெண்களுக்கான மல்யுத்தம் 2004-ம் ஆண்டு தான் அறிமுகம் ஆனது. மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற அரிய மகிமையை சாக்‌ஷி மாலிக் பெற்றுள்ளார்.

    * கர்ணம் மல்லேஸ்வரி (பளுதூக்குதல்), மேரிகோம் (குத்துச்சண்டை), சாய்னா நேவால் (பேட்மிண்டன்) ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பெண்மணிகள் ஆவர். இந்த பட்டியலில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

    * சாக்‌ஷியின் பதக்கத்தால் மல்யுத்தத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 5 ஆக (1952-ம் ஆண்டு கே.டி.ஜாதவ், 2008, 2012-ம் ஆண்டுகளில் சுஷில்குமார், 2012-ம் ஆண்டு யோகேஷ்வர் தத்) உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் தனிநபர் விளையாட்டில் அதிக பதக்கங்களை பெற்றுத்தந்த விளையாட்டாக தற்போது மல்யுத்தம் திகழ்கிறது.
    ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

    கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது.

    இதற்கிடையே தேசிய ஊக்கமருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்சனை குறித்து விசாரணை நடத்தியது. அப்போது, தனக்கு தெரியாமல் உணவில் ஊக்கமருந்தை கலந்து விட்டதாகவும், இது தனக்கு எதிராக நடந்த சதி என்றும் நர்சிங் யாதவ் குற்றம்சாட்டினார். மேலும், ஆணையம் முன் ஆஜராகி 600 பக்க விளக்கத்தையும் சமர்ப்பித்தார்.

    விசாரணை முடிவில் ‘‘நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார்’’ என்று ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) முறையீடு செய்தது.

    இந்நிலையில், உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் முறையீட்டு மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளது.

    ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி. சிந்துவிற்கு பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் மோதினார்.

    இதில் சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    பி.வி. சிந்துவின் இந்த வெற்றி மூலம் இந்தியாவிற்கு வெள்ளி அல்லது தங்க பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    பேட்மிண்டன் இறுதிப்போட்டிற்கு முன்னேறியுள்ள சிந்துவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ‘இந்த வெற்றியின் மூலம் பி.வி. சிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இறுதிப்போட்டியில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    ‘சிறப்பாக விளையாடிய பி.வி. சிந்துவிற்கு எனது வாழ்த்துகள். இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, வெளியுறுவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் பி.வி. சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை உறுதி செய்தார்.
    ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் மோதினார்.

    முதல் செட்டில் பி.வி. சிந்து ஆக்ரோஷமாக விளையாடினார். இதனால் எந்தவொரு சூழ்நிலையிலும் ஜப்பான் வீராங்கனையை விட பின்தங்கவில்லை. 11-6 என முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் ஜப்பான் வீராங்கனை சிந்துவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் 17-18 என ஒரு புள்ளி வித்தியாசத்தில்தான் ஜப்பான் வீருாங்கனை பின்தங்கியிருந்தார்.

    பின்னர் சிந்து சிறப்பாக விளையாடி 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2-வது செட்டில் 3-0 என சிந்து முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் தொடர்ச்சியான ஜப்பான் வீராங்கள் புள்ளிகள் பெற்று 4-3 என முன்னிலை பெற்றார். அதன்பின் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினார்கள். ஜப்பான் வீராங்கனையின் சிறப்பான ஆட்டத்தை முறியடித்து சந்திது 11-10 என முன்னிலையில் இருந்தார்.

    அதன்பின் சிந்து அபாரமாக விளையாடினார். அதற்கு ஜப்பான் வீராங்கனையால் ஈடுகொடுக்க முடியவில்லை. சிந்து தொடர்ந்து 10  புள்ளிகள் பெற்றார். இதனால் 21-10 என 2-வது செட்டை எளிதில் கைப்பற்றி 2-0 என வெற்றி பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆகவே, சிந்து வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
    ×