என் மலர்
செய்திகள்

பதக்கத்துக்கான ஆட்டத்தில் எதிராளியை மடக்குகிறார், சாக்ஷி (மேலே).
சாக்ஷி மாலிக் யார்? வாகை சூடியது எப்படி?
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய சாக்ஷி மாலிக் எப்படி ஜெயித்தார், என்ன சாதனைகள் படைத்திருக்கிறார் என்பதையும் அவரது பயோடேட்டாவையும் பார்க்கலாம்.

அரியானா மாநிலம் ரோட்டாக் மாவட்டத்தில் உள்ள மோக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சாக்ஷி மாலிக். 1992-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந்தேதி பிறந்தார். பெற்றோர்: சுக்பிர்-சுதேஷ், சகோதரி சுவாதி, சகோதரர் சச்சின்.
வயது: 23, உயரம்: 162 சென்டிமீட்டர், எடை: 58 கிலோ
பதக்கத்துக்கு முத்தமிட, ஒரே நாளில் அதாவது 8 மணி நேரத்தில் 5 வீராங்கனைகளுடன் மல்லுகட்டியிருக்கிறார்.
தகுதி சுற்று: ஜோஹன்னா மேட்சனுடன் (சுவீடன்) வெற்றி (5-4)
பிரதான முதலாவது சுற்று: மரியானா செர்டிவாராவுடன் (மால்டோவா) சமன் (5-5). பிறகு எச்சரிக்கை புள்ளியை தவிர்த்து அதிகமான புள்ளிகளை எடுத்ததன் அடிப்படையில் வெற்றி அறிவிப்பு.
கால்இறுதி: வலெரியா கோப்லோவாவுடன் (ரஷியா) தோல்வி (2-9)
‘ரெபசாஜ்’ நேரடி 2-வது சுற்று: ஒர்கோன் புரேவ்டோர்ஜியுடன் (மங்கோலியா) வெற்றி (12-3)
‘ரெபசாஜ்’ வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம்: அய்சுலு டைனிபிகோவாவை (கிர்கிஸ்தான்) சாய்த்து (8-5) பதக்கத்தை சூடினார்.
மல்யுத்தத்தில் தோல்வி அடைவோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது தான் ‘ரெபசாஜ்’ முறை. அதாவது இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வீரர் அல்லது வீராங்கனைகளிடம் முந்தைய ஆட்டங்களில் தோல்வி அடைவோர் மட்டும் ‘ரெபசாஜ்’ மூலம் மீண்டும் ஒரு முறை விளையாடும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். இந்த முறையில் அதிகபட்சமாக வெண்கலம் வெல்ல முடியும். இவ்வாறு வாய்ப்பு பெறுபவர்கள் படிப்படியாக முன்னேறினால், கடைசியில் அரைஇறுதியில் தோற்று காத்திருப்போரிடம் வெண்கலப் பதக்கத்துக்காக கோதாவில் குதிக்க வேண்டும்.
சாக்ஷி மாலிக்குக்கு கால்இறுதியில் ‘செக்’ வைத்த ரஷியாவின் வலெரியா கோப்லோவா இறுதிசுற்றை எட்டியதால், சாக்ஷிக்கு மறுவாழ்வு கிட்டியது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அமர்க்களப்படுத்திய சாக்ஷி மாலிக், ஒரே நாளில் தேசத்தின் நாயகியாக உச்சத்துக்கு சென்று விட்டார்.
சாதனைகள் என்னென்ன?
* நவீன ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மல்யுத்தம் 1896-ம் ஆண்டு முதல் இருந்தாலும் பெண்களுக்கான மல்யுத்தம் 2004-ம் ஆண்டு தான் அறிமுகம் ஆனது. மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற அரிய மகிமையை சாக்ஷி மாலிக் பெற்றுள்ளார்.
* கர்ணம் மல்லேஸ்வரி (பளுதூக்குதல்), மேரிகோம் (குத்துச்சண்டை), சாய்னா நேவால் (பேட்மிண்டன்) ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பெண்மணிகள் ஆவர். இந்த பட்டியலில் சாக்ஷியும் இணைந்துள்ளார்.
* சாக்ஷியின் பதக்கத்தால் மல்யுத்தத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 5 ஆக (1952-ம் ஆண்டு கே.டி.ஜாதவ், 2008, 2012-ம் ஆண்டுகளில் சுஷில்குமார், 2012-ம் ஆண்டு யோகேஷ்வர் தத்) உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் தனிநபர் விளையாட்டில் அதிக பதக்கங்களை பெற்றுத்தந்த விளையாட்டாக தற்போது மல்யுத்தம் திகழ்கிறது.

Next Story