என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாகவே வந்த விஜய்...
- இந்த பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
- அதிகாலையில் இருந்தே ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் குவிந்தனர்.
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை பனையூரில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை 8 மணிக்கு விஜய் காரில் புறப்பட்டார். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே (அதாவது 10 நிமிடத்திற்கு) விஜய் உப்பளம் ஹெலிபேடு மைதானத்துக்கு விஜய் வந்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு முதன் முறையாக திறந்த வெளியில் மக்களை சந்திக்கிறார் விஜய். முந்தைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு மாறாக விஜயின் புதுவை மக்கள் சந்திப்பு அமைந்துள்ளது.
பிரசார வாகனத்தில் பேரணியாக செல்வதை விஜய் முற்றிலும் தவிர்த்தார். இந்த பொதுக் கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் இந்த மக்கள் சந்திப்பானது மாநாடு போல் காட்சியளித்தது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் அதிகாலையில் இருந்தே ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் குவிந்தனர்.






