என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை பள்ளி, கல்லூரிகளில்  நிவாரண முகாம்- கலெக்டர் உத்தரவு
    X

    புதுவை பள்ளி, கல்லூரிகளில் நிவாரண முகாம்- கலெக்டர் உத்தரவு

    • அதி கனமழை, கடும் சூறாவளி காற்றுடன் புயல் கரையை கடந்த நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
    • நிவாரண முகாம் செயல்படுவது குறித்து அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு கலெக்டர் குலோத்துங்கள் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.

    புதுவையில் அதி கனமழை, கடும் சூறாவளி காற்றுடன் புயல் கரையை கடந்த நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் பொதுமக்களுக்கான நிவாரண முகாமாக செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

    நிவாரண முகாம் செயல்படுவது குறித்து அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு கலெக்டர் குலோத்துங்கள் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை நிவாரண முகாமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×