தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி என மக்கள் பேச தொடங்கி விட்டனர் - ராஜேந்திர பாலாஜி

சனிபகவானை கும்பிட்டு தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும்.தமிழகத்தை அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக உள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாமி தரிசனம் செய்த காட்சி.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாமி தரிசனம் செய்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம கூறியதாவது:-

மார்ச் 6-ந் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் தேர்தல் பணிகள் இருப்பதினால் முன்னதாகவே சனிபகவானை தரிசிக்க வந்தேன்.

சனிபகவானை கும்பிட்டு தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும்.

தமிழகத்தை அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான் என மக்கள் பேச தொடங்கி விட்டனர். புதுவையிலும் இந்த பேச்சு தொடங்கி விட்டது. அற்புதமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் செல்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியமைக்கும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com