என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் இரவில் இடி மின்னலுடன் மழை
    X

    புதுச்சேரியில் இரவில் இடி மின்னலுடன் மழை

    • பருவமழை காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் பெரியளவில் இல்லை.
    • இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைந்தது.

    பருவமழை காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் பெரியளவில் இல்லை. ஆனால் அதன்பின் கடந்த 1-ந் தேதி முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து 100 டிகிரியை எட்டி வெயில் வாட்டி வதைத்தது.

    இந்த நிலையில் மேற்கு திசை காற்று மாறுபாட்டால் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரியில் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இரவு 10.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து புதுச்சேரியில் குளர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர். இருப்பினும் இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டியது.

    Next Story
    ×