search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ஹோன்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்
    X

    இந்தியாவில் ஹோன்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்

    ஹோன்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவது பற்றிய திட்டங்களை அறிவித்துள்ளது. #Honda #ElectricVehicle



    ஹோன்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவது பற்றிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி ஹோன்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் 2023-24 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஹோன்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் பி-பிரிவு ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்தய வெளியீடு அந்நிறுவனத்தின் சர்வதேச எலெக்ட்ரிக் வெளியீட்டின் அங்கமாக இருக்கும் இந்த திட்டம் அடுத்த ஆண்டு சீனாவில் துவங்குகிறது.

    இந்திய சந்தையில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஹோன்டா ஏற்கனவே ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் இனிமேலும் அரசின் எலெக்ட்ரிக் வாகன திட்டத்திற்காக காத்திருக்காது என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முன்னதாக ஹோன்டா நிறுவனம் தனது பிரபல சிட்டி மாடலை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.



    இந்திய சந்தையில் ஹோன்டா நிறுவனம் 1995ம் ஆண்டு களமிறங்கியது, பின் மூன்று ஆண்டுகள் கழித்து தனது முதல் வாகனமாக சிட்டி செடான் காரை அறிமுகம் செய்தது. ஹோன்டா நிறுவனம் அதிகளவு பெட்ரோல் வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. ஹோன்டாவின் முதல் சிறிய ரக கார் 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    பின் 2013ம் ஆண்டில் ஹோன்டாவின் முதல் டீசல் கார் மாடலாக ஹோன்டா அமேஸ் 2013ல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஹோன்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் எலெகெட்ரிக் வாகனங்களை வெளியிடுவதில் மற்ற நிறுவனங்களை பின்பற்ற விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. அந்த வகையில் அந்நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீட்டை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹோன்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹைப்ரிட் தீர்வுகளுக்கு ஹோன்டா உற்பத்தியை உள்நாட்டில் அதிகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×