search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் சான்ட்ரோ 2018 வெளியானது
    X

    இந்தியாவில் சான்ட்ரோ 2018 வெளியானது

    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 சான்ட்ரோ கார் வெளியிடப்பட்டது. #Santro



    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய சான்ட்ரோ கார் மாடலை இந்தியாவில் வெளியிட்டது. புதிய ஹூன்டாய் சான்ட்ரோ துவக்க விலை ரூ.3.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. புதிய சான்ட்ரோ கார்: டிலைட், இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என ஐந்து வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    இதன் டிலைட் வேரியன்ட் ரூ.3.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டாப்-என்ட் ஆஸ்டா வேரியன்ட் விலை ரூ.5.45 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சான்ட்ரோ கார் AMT கியர்பாக்ஸ் மற்றும் CNG ஃபியூயல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.



    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் முந்தைய சான்ட்ரோ கார் போன்ற டால்பாய் வடிவமைப்பைத் தழுவி முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், குரோம் இன்சர்ட், ஸ்பெவ்ப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், முன்பக்கம் கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் புதிய பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கொண்டுள்ளது.

    புதிய சானட்ரோ கார் டைஃபூன் சில்வர், போலார் வைட், ஸ்டார்டஸ்ட், இம்பீரியல் பெய்க், மரீனா புளுஷ ஃபியரி ரெட் மற்றும் டையானா கிரீன் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. 2018 சான்ட்ரோ காரின் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் பிளாக் மற்றும் பெய்க் என டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

    ஹூன்டாய் சான்ட்ரோ காரில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மிரர்லின்க் போன்ற வசதிகள் வழங்கப்ட்டுள்ளன. இத்துடன் மின்சார முறையில் மாற்றக்கூடிய ORVMகள், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. போர்ட், மடிக்கக்கூடிய பின்புற இருக்கைகள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் டிரைவர் ஏர்பேக், ABS, EBD மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்பட்டுள்ளது. சான்ட்ரோ டாப்-என்ட் மாடலில் பாசென்ஜர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கேமரா, ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பின்புற டீஃபாகர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஹூன்டாய் முதல் முறையாக வழங்கி இருக்கிறது. இத்துடன் புதிய சான்ட்ரோ CNG வசதியும் கொண்டுள்ளது. 
    Next Story
    ×