என் மலர்

  செய்திகள்

  ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
  X

  ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jeepcompass  ஜீப் இந்தியா நிறுவனம் புதிய காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய பிளாக் பேக் எடிஷன் டாப் என்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. 

  பிளாக் பேக் எடிஷனில் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனத்திற்கு காம்பஸ் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் விற்பனையை மேலும் அதிகப்படுத்த இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

  வெளிப்புறத்தில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷனில் பிளாக் நிற ORVMகள், அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலில் டாப்-என்ட் வேரியன்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரையும் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது.  வோக்கல் மைன், மினிமல் கிரே மற்றும் மக்னீசியோ கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் உள்புறம் முற்றிலும் புதிய கருப்பு நிற தீம் கொண்டுள்ளது. இது ஜீப் காம்பஸ் ஸ்டான்டர்டு வேரியன்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் டூயல் டோன் தீமிற்கு மாற்றாக அமைந்துள்ளது. இதன் கேபினை பொருத்த வரை ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சென்ட்டர் கன்சோல் மற்றும் கதவுகளில் க்ரோம் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

  பிளாக் பேக் எடிஷனில் 2-லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு ஸ்டான்டர்டு மாடலை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் விலை ரூ.20.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×