என் மலர்

  செய்திகள்

  புதிய நிறத்தில் பி.எம்.டபுள்யூ. G 310 R அறிமுகம்
  X

  புதிய நிறத்தில் பி.எம்.டபுள்யூ. G 310 R அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் G 310 R புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடல்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.  இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. G 310 R மற்றும் G 310 GS மாடல்கள் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதை அறிவித்து விட்டது. இந்நிலையில் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது G 310 R மாடலை மேம்படுத்தி, புதிய நிறங்களில் வெளியிட்டுள்ளது. புதிய நிறங்கள் தவிர புதிய மாடலில் எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை.

  பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலில் புதிய ரேசிங் ரெட் நிறம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிறம் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய நிறம் தவிர G 310 R மாடலில் ஹெச்.பி. மோட்டார்ஸ்போர்ட் நிறம் பியல் வைட் ஃபினிஷ் மற்றும் ஹெச்.பி. வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது.

  ஸ்ட்ராடோ புளு மெட்டாலிக் வைட் நிறத்தை பி.எம்.டபுள்யூ. நிறுத்திவிட்ட நிலையில், காஸ்மெட் பிளாக் நிறம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

  இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. மோட்டாராட் நிறுவனம் G 310 R மாடலுடன் G 310 GS மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் அந்நிறுவனம் புதிய நிற மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக பி.எம்.டபுள்யூ. G 310 R இருக்கும் என கூறப்படுகிறது. டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஓசுர் தயாரிப்பு ஆலையில் பி.எம்.டபுள்யூ. G 310 R உருவாக்கப்படுகிறது. 

  2016-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட G 310 R அன்று முதல் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. பி.எம்.டபுள்யூ. G 310 R மற்றும் G 310 GS மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்படும் முன்பே விற்பனையாளர்களிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறு. இந்தியாவில் 310 ட்வின் மாடல்களின் அறிமுகம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

  பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலில் 313 சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 33.5 பி.எச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதே வகை இன்ஜின் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

  புதிய பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலில் முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக் மற்றும் ABS உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×