என் மலர்tooltip icon

    இந்தியா

    நீங்கள் ISIS வாரிசுகள்.. பாகிஸ்தான் இந்தியாவை விட அரை நூற்றாண்டு பின்தங்கியுள்ளது - ஒவைசி
    X

    நீங்கள் ISIS வாரிசுகள்.. பாகிஸ்தான் இந்தியாவை விட அரை நூற்றாண்டு பின்தங்கியுள்ளது - ஒவைசி

    • சிலர் காஷ்மீரிகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் வெட்கமற்றவர்கள்.
    • பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது தனது உயிரைத் தியாகம் செய்தது ஒரு காஷ்மீரி.

    மகாராஷ்டிரா மாநிலம் பிரபானியில் வக்பு திருத்தம் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவரும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது :-

    பாகிஸ்தான் தலைவர்களின் அச்சுறுத்தல்களால் எதுவும் செய்து விட முடியாது. "நீங்கள் அரை மணி நேரம் பின்தங்கியிருக்கவில்லை, இந்தியாவை விட அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கிறீர்கள். பாகிஸ்தான் நாட்டின் மொத்த பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டுக்கு கூட சமமாக இல்லை.

    "பாகிஸ்தான் தங்களிடம் அணுகுண்டுகள் இருப்பதாக திரும்பத் திரும்பச் சொல்கிறது. வேறொரு நாட்டிற்குள் சென்று அப்பாவி மக்களைக் கொன்றால், எந்த நாடும் அமைதியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்."

    பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் கொல்வதற்கு முன்பு பயங்கரவாதிகள் அவர்களின் மதத்தைக் கேட்டிருக்கிறார்கள் "நீங்கள் எந்த மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் கவாரிஜ்களை விட மோசமானவர்கள். இந்தச் செயல் நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் வாரிசுகள் என்பதைக் காட்டுகிறது.

    இந்தியாவை குறிவைத்து பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது. மேலும், சர்வதேச சட்டம் இந்தியா பாகிஸ்தானின் விமானப்படையை முற்றுகையிட அனுமதிக்கிறது.

    பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஷ்மீர் போலவே காஷ்மீரிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்தவர்கள். "சிலர் காஷ்மீரிகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் வெட்கமற்றவர்கள்.

    பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது தனது உயிரைத் தியாகம் செய்தது ஒரு காஷ்மீரி. காயமடைந்த குழந்தையை முதுகில் சுமந்து 40 நிமிடங்கள் நடந்து சென்று உயிரைக் காப்பாற்றியவவர் ஒரு காஷ்மீரி.

    காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்போது காஷ்மீரியும் இந்தியாவின் ஒரு பகுதிதான்.

    வக்பு திருத்தம் சட்டம் குறித்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்த போராட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.

    Next Story
    ×