என் மலர்
இந்தியா

தாய் போல தாங்க முடியுமா.. குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய தாய்- வைரல் வீடியோ
- குழந்தைக்கு நிஜமாகவே ரோலர் கோஸ்டரில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறார்.
- வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் ஒரே நாளில் ஒரு கோடியே 60 லட்சம் பேரின் பார்வைகளை பெற்றுள்ளது.
குழந்தைகளின் இதயம் மென்மையானது. அவர்களின் மகிழ்ச்சியை எந்த பெற்றோரும் தன் வறுமையைக் காட்டி முடக்குவது இல்லை. அப்படியொரு ஏழைத்தாய் சிக்கலான சூழலில் எப்படி தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார் என்பது பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.
அந்த தாய், வீட்டில் உள்ள சாதாரண நாற்காலி மற்றும் இணைய வீடியோவைக் கொண்டு குழந்தைக்கு ரோலர் கோஸ்டர் பயண அனுபவத்தை வழங்கி நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். அவரது சிறுவயது குழந்தையை நாற்காலியை திருப்பிப் போட்டு, அதன்மீது தலையணையில் அமர வைத்து நாற்காலியின் கால்களை பிடித்துக் கொள்ளச் செய்கிறார்.
நாற்காலியை தன் மடியின் மீது வைத்தபடி அதன் மற்ற இரு கால்களை தாயார் பிடித்துக் கொண்டு, ரோலர்கோஸ்டர் இணைய வீடியோவை டி.வி.யில் இயக்கிவிடுகிறார். பின்னர் அதன் போக்கிற்கு ஏற்ப தான் பிடித்துள்ள நாற்காலியை அசைத்து குழந்தைக்கு நிஜமாகவே ரோலர் கோஸ்டரில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறார்.
குழந்தையும் மகிழ்ச்சியாக அதை அனுபவிக்கிறது. இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்த இந்த வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் ஒரே நாளில் ஒரு கோடியே 60 லட்சம் பேரின் பார்வைகளை பெற்றுள்ளது. வேறு சமூக ஊடகங்களிலும் இந்த காட்சி வலம் வருகிறது.






