என் மலர்tooltip icon

    இந்தியா

    சித்தராமையா மகனின் தலைமைத்துவம் குறித்த கருத்துக்கு டி.கே. சிவக்குமார் அளித்த பதில்..!
    X

    சித்தராமையா மகனின் தலைமைத்துவம் குறித்த கருத்துக்கு டி.கே. சிவக்குமார் அளித்த பதில்..!

    • சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்.
    • தனது தந்தைபோன்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி முன்னோக்கு சிந்தனை கொண்டவர்- யதீந்திரா.

    கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.

    இதற்கிடையே, அடுத்த மாதம் நவம்பரில் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், "சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார். அத்துடன் "தனது தந்தைபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி முன்னோக்கு சிந்தனை கொண்டவர்" எனக் கூறியிருந்தார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தனர்.

    டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், சதீஷ் ஜர்கிஹோலி பெயரை பயன்படுத்தியது டி.கே. சிவக்குமார் அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே. சிவக்குமார்தான் முதலமைச்சராக வேண்டும் என்று கூறிய இரண்டு பேருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், சித்தராமையாவின் மகனுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு டி.கே. சிவக்குமார் "இதற்கு நான் இப்போது பதில் கூற போவதில்லை. யாரிடம் பேச வேண்டுமோ, அவர்களிடம் பேசுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என சித்தராமையா கூறி வருகிறார்.

    Next Story
    ×