என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: ஐக்கிய அரபு அமீரக அதிபர் இந்தியா வருகை.. நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி
    X

    VIDEO: ஐக்கிய அரபு அமீரக அதிபர் இந்தியா வருகை.. நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி

    • பிரதமர் மோடியும், ஷேக் முகமதும் ஒரே காரில் பயணம் செய்தனர்
    • ஊஞ்சல், வெள்ளிப் பட்டு சால்வை உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

    விமான நிலையம் வந்திறங்கிய அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கட்டித் தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார்.

    விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடியும், ஷேக் முகமதும் ஒரே காரில் பயணம் செய்தனர்

    முகமதுவுக்கு பாரம்பரிய ஊஞ்சல், வெள்ளிப் பட்டு சால்வை உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பரிசளித்தார். இருவரும் இரு நாட்டு உறவுகள் புதிய ஒப்பந்தங்கள் குறித்து உயர் மட்ட கூட்டத்தில் விவாவித்ததாக கூறப்படுகிறது.

    "எனது சகோதரர் ஷேக் முகமதுவின் வருகை, இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வலுவான நட்புறவை உலகிற்கு உணர்த்துகிறது" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×