என் மலர்
இந்தியா

VIDEO: குழம்பு கிளறிவிட்ட பொக்லைன் எந்திரம்
- ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக ராட்சத அண்டாவில் குழம்பு சமைக்கிறார்கள்.
- இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடனடியாக வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
பொக்லைன் எந்திரத்தை, பள்ளம் தோண்டுதல், கட்டிட வேலைகள் உள்ளிட்ட கரடு முரடான பணிகளில் பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். விருந்தில் சமையல் பாத்திரத்தை கிளறிவிடுவதற்காக பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு விசித்திர காட்சி இணையத்தில் பரவி பார்ப்பவர்களை வியப்புக்குள்ளாக்கி வருகிறது.
ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக ராட்சத அண்டாவில் குழம்பு சமைக்கிறார்கள். அதை அடிப்பிடிக்காமல் கிளறி விடுவதற்கு கரண்டிக்குப் பதிலாக பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி இருக்கும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது எங்கு படமாக்கப்பட்டது என்பது பற்றிய குறிப்பு இல்லை. இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டதா? என்றும் தெரியவில்லை.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடனடியாக வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. பொக்லைன் எந்திரத்தின் இத்தகைய தனித்துவமான பயன்பாட்டைப் பார்த்து பலரும் வாயடைத்துப் போனாலும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை கேள்வியாக எழுப்பினர்.






