என் மலர்
இந்தியா

VIDEO: வந்தே பாரத் ரெயிலுக்குள் கொட்டிய மழைநீர்.. சோதனையில் முடிந்த சொகுசு பயணம்!
- காணொளியில், தண்ணீர் பாய்வதைக் காணலாம்.
- தொழில்நுட்ப கோளாறால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் மழைநீர் கொட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
வைரலாகி வரும் வீடியோவில், 'டெல்லிக்குச் செல்லும் 22415 வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இலவச 'நீர்வீழ்ச்சி' சேவை' என்று எழுதப்பட்டுள்ளது. @ranvijaylive என்ற X பயனரால் பதிவேற்றப்பட்ட காணொளி 23,000+ பார்வைகளைப் பெற்றுள்ளது.
காணொளியில், ஏசி வென்டிலேட்டர்கள் வழியாக தண்ணீர் இருக்கைகள் மீது விழுவதை காணலாம்.
ஏர் இந்தியா விமானத்தில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்ட மற்றொரு காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தண்ணீர் கசிவு சம்பவம் பதிவாகியுள்ளது.
தற்போதைய சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, வடக்கு ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தற்காலிக தொழில்நுட்ப கோளாறால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
Next Story






