UPA ஆட்சி இழக்கப்பட்ட வாய்ப்புகளின் தசாப்தம்: மக்களவையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம்

பலவீனமான தலைமைத்துவம்- சிறந்த தலைமைத்துவம் இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையிலான வித்தியாசம்.பல துறைகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின் தோல்விக்காக சமாளிப்புகள் கதையை ஜனாதிபதி உரை எதிரொலிக்கிறது.
UPA ஆட்சி இழக்கப்பட்ட வாய்ப்புகளின் தசாப்தம்: மக்களவையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம்
Published on

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியதாவது:-

பலவீனமான தலைமைத்துவம்- சிறந்த தலைமைத்துவம் இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையிலான வித்தியாசம்.

பல துறைகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின் தோல்விக்காக சமாளிப்புகள் கதையை ஜனாதிபதி உரை எதிரொலிக்கிறது. UPA ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகள் இழக்கப்பட்ட வாய்ப்புகளின் தசாப்தம்.

உலகில் செழிப்பான ஜனநாயகத்தில் தலைவர்கள் வருவார்கள். செல்வார்கள். ஆனால் மெஜாரிட்டியுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக அதிகாரத்திற்கு வந்துள்ளார்.

இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதம், நக்சலைட்டுகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு குறித்து பேசினார். அப்போது பாஜக எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி ராணுவ தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தார் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com