Salary | சம்பளம், சலுகைகள் இன்றி வேலை: மக்களவையில் கலக்கும் எம்.பி.க்கள்

மக்களவையில் 2 எம்பிக்கள் தங்களது ஊதியங்களைப் பெறுவதில்லை. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
Salary | சம்பளம், சலுகைகள் இன்றி வேலை: மக்களவையில் கலக்கும் எம்.பி.க்கள்
Published on

புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 541 எம்.பி.க்கள் உள்ளனர்.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, மொத்தம் 481 எம்பிக்கள் தங்கள் மாத ஊதியங்களைப் பெறுகின்றனர். இவர்களில் 2 எம்பிக்கள் தங்களுக்கு மாத ஊதியம் வேண்டாம் என தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ.க.வின் நவீன் ஜிண்டாலும், காங்கிரசின் டாக்டர் பிமோல் அகோய்ஜாம் ஆகிய இருவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

நவீன் ஜிண்டால் அரியானாவின் குருஷேத்ரா தொகுதி எம்.பி. ஆவார். காங்கிரசின் பிமோல், மணிப்பூரின் இம்பால் தொகுதி எம்பி. ஆவார். இந்த இரு எம்.பி.க்களும் தங்கள் ஊதியத்தை மட்டுமின்றி தனக்காக அரசு அளிக்கும் இதர சலுகைகளையும் பெற மறுத்துவிட்டனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் பொது சேவையில் அசாதாரண அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழிலதிபரான நவீன் ஜிண்டாலுக்கு ரூ.1,241 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. பேராசிரியரான முனைவர் பிமோல் அகோய்ஜாமுக்கு ரூ.97 லட்சம் சொத்துகள் மட்டுமே உள்ளன. இருவருக்கும் இடையே இந்த நிதி இடைவெளி இருந்தபோதிலும், இருவரும் சம்பளம் பெறாமல் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com