என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு: அந்நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது  இந்தியா
    X

    பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு: அந்நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது இந்தியா

    • பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது துருக்கி.
    • துருக்கி டிரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. ஆபஷேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டபோது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.

    அத்துடன், இன்று எதிர்காரலத்திலும் பாகிஸ்தானுக்கு அதரவு அளிப்போம் எனத் தெரிவித்தது. இந்த நிலையில் துருக்கி நிறுவனம் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. செலிபி கிரவுண்ட் ஹேண்ட்லிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Celebi Ground Handling India Private Limited) என்ற அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துருக்கி நிறுவனத்திற்கு எதிராக முதன்முறையாக இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னதாக துருக்கி போர் விமானம் மற்றும் போர்க் கப்பல் பாகிஸ்தானுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

    துருக்கு மற்றும் அஜர்பைஜான் பாகிஸ்தான் உடன் வர்த்தகம், சுற்றுலா, வங்கி போன்ற துறைகளில் நெருங்கிய உறவு வைத்துள்ளது. மூன்று நாடுகளில் ராணுவம் ஒன்றுக்கொன்று சார்ந்து இருக்கிறது.

    இந்த முறை துருக்கி பாகிஸ்தானுக்கு வெறும் வார்த்தைகளில் மட்டும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியா மீது தாக்குதல் நடத்திய டிரோன்கள் துருக்கியை சார்ந்ததாகும். இதனால் ஆயுதங்களும் வழங்கி உதவி செய்துள்ளது.

    துருக்கியின் இந்த செயல்களால் வர்த்தக சங்கங்கள், சுற்றுலா ஆபரேட்டர்கள் துருக்கியை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். ஏராளமான டிராவல் இணையதளங்கள் துருக்கி பயணத் திட்டங்களை ரத்து செய்துள்ளன. துருக்கிற்கு 12 சதவீதம் வருவாய் சுற்றுலா மூலம் கிடைக்கிறது.

    செலிபி செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா (கிரவுண்ட் கையாள்தல் செயல்பாடு), செலிபி டெல்லி கார்கோ டெர்மினல் மானேஜ்மென்ட் இந்தியா (டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டு சரக்கு சேவையை கையாள்தல்) ஆகிய இரண்டு நிறுவனங்களை கொண்டுள்ளது.

    Next Story
    ×