என் மலர்
இந்தியா

பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. சித்ரவதை செய்து கொன்ற கொடூரர்கள்
- கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.
- குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் படுகாயங்களுடன் குடுபத்தினரால் மீட்கப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் 45 வயது பழங்குடிப் பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கல்வா தாலுகாவில் உள்ள ரோஷ்னி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ராஜேஷ் ரகுவன்ஷி கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு, கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.
கண்ட்வா மாவட்ட மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. அறிக்கை வந்த பிறகு கூடுதல் விவரங்கள் கிடைக்கும்" என்று கூறினார்.
இறந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மேலும் பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் குர்கு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வெள்ளிக்கிழமை ஒரு திருமணத்தில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் படுகாயங்களுடன் குடுபத்தினரால் மீட்கப்பட்டார். பிற்பகல் 2 மணியளவில் அவர் இறந்துவிட்டார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஏஎஸ்பி தெரிவித்தார்.






