என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்தில் 2 யானைகள் பயன்படுத்தப்படும்- திருவிதாங்கூர் தேவஸ்தானம்
    X

    சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்தில் 2 யானைகள் பயன்படுத்தப்படும்- திருவிதாங்கூர் தேவஸ்தானம்

    • சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும்.
    • கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வழக்கமான பூஜை, வழிபாடுகளுடன் உத்சவ பலி, ஸ்ரீபூத பலி உள்பட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவில் வருகிற 10-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டையும், 11-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழாவும் நடைபெறும்.

    வழக்கமாக சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ஊர்வலத்திற்கு 2 யானைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆராட்டு விழா, சாமி ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்படும் யானைகளுக்கு போதிய ஓய்வு அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சபரிமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெறும் ஆராட்டு சாமி ஊர்வலத்திற்கு சபரிமலையில் இருந்து பம்பைக்கு ஒரு யானையும், ஆராட்டுக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மற்றொரு யானையும் பயன்படுத்தப்படும்.

    இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெளிநல்லூர் மணிகண்டன் என்ற யானை நேற்று சபரிமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. மற்றொரு யானையை பம்பையில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊர்வலத்தின் போது செண்டை உள்ளிட்ட மேளங்களை தவிர்த்து தவில் உள்ளிட்ட மேளங்கள் பயன்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×