search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் போராட்டம் காரணமாக சாலைகளை மூடிய போலீசார்-  கடும் போக்குவரத்து நெரிசலால் திணறியது டெல்லி
    X

    டெல்லியில் போக்குவரத்து நெரிசல் 

    காங்கிரஸ் போராட்டம் காரணமாக சாலைகளை மூடிய போலீசார்- கடும் போக்குவரத்து நெரிசலால் திணறியது டெல்லி

    • பல சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
    • போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அலுவலகத்திற்கு பலர் தாமதமாக சென்றனர்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராகவும், ராகுல் காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைநகர் டெல்லியில் காங்கிரசார் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கோல் டக் கானா சந்திப்பு, படேல் சௌக், வின்ட்சர் பிளேஸ், தீன் மூர்த்தி சௌக் மற்றும் பிருத்விராஜ் சாலைகளை போலீசார் மூடினர். பேருந்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

    மேலும் கோல் மேத்தி சந்திப்பு, துக்ளக் சாலை சந்திப்பு, கிளாரிட்ஜஸ் சந்திப்பு, கியூ-பாயின்ட் சந்திப்பு, சுனேஹ்ரி மசூதி சந்திப்பு, மௌலானா ஆசாத் சாலை சந்திப்பு, மான் சிங் சாலை சந்திப்புகளில் காலை 800 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பயணம் செய்வதை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    இதனால் டெல்லி-நொய்டா-டெல்லி பறக்கும் பாதை, மீரட் எக்ஸ்பிரஸ்வே, ஆனந்த் விஹார், சராய் காலேகான், பிரகதி மைதானம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் சிக்கி தவித்த பயணிகள் தங்களது துயரங்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அலுவலகத்திற்குத் தாமதமாக சென்றதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×